மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு மதிப்பெண்களில் பெரும் குளறுபடி
சென்னை:
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் பெரும் குளறுபடி நடந்துள்ளது.
இது தொடர்பாக நந்தினி தேவி உள்பட 5 மாணவ, மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளனர். அவர்களின் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இதில் இயற்பியலுக்குபாடத்துக்கு தனி தேர்வு நடந்தது. அந்த அப்ஜெக்டிவ் டைப் (பதில்களைத் தேர்வு செய்யும் முறை) கேள்வித்தாளில், 14ம் எண் கேள்விக்கான பதில்களில் குளறுபடி இருந்தது.
முதலில் பதில் சி தான் சரியான விடை என அண்ணா பல்கலைக்கழகம் கூறியது, பின்னர் பதில் டி தான் சரி என்றுகூறி, சியை தேர்வு செய்த மாணவர்களுக்கு தரப்பட்ட மதிப்பெண்ணையே (0.42 மார்க்) அண்ணா பல்கலைக்கழம்ரத்து செய்துவிட்டது. இதனால் 60,000 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 60,000 மாணவ, மாணவிகளுக்கு 0.42 மதிப்பெண்ணைக் குறைத்து புதிய மதிப்பெண் பட்டியல்களைஅனுப்பி வைத்துள்ளது.
இது நியாயமற்றம். ஏற்கனவே தரப்பட்ட மதிப்பெண்களை எங்களுக்குத் தர வேண்டும். மேலும் இந்தவிவகாரத்தில் தீர்ப்பு தரப்படும் வரை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கும் தடைவிதிக்க வேண்டும்.
ஏற்கனவே தரப்பட்ட மார்க்படி ரேங்க் பட்டியலில் நாங்கள் முன்னணியில் இருந்திருப்போம். திடீரென மார்க்கைக்குறைத்துவிட்டால் மருத்துவக் கல்லூரிகளில் சேர உரிய கட்-ஆப் மதிப்பெண் இல்லாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம்.
நுழைவுத் தேர்வில் நடந்த குளறுபடிக்கு எங்களை பலிகடா ஆக்கக் கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போல மேலும் நூற்றுக்கண்ககான மாணவ, மாணவர்களும்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி குலசேகரன், இயற்பியல் பாடத்திற்கான கேள்வித் தாளில் கேள்வி எண் 14க்குசரியான பதில் எது என்பதை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தர, 3 பேராசிரியர்கள் கொண்ட குழுவைஅமைக்க உத்தரவிட்டார்.
இந்தக் குழு விசாரணை நடத்தி சி, மற்றும் டி ஆகிய இரு விடைகளும் சரியானவை தான் என அறிக்கைதந்துள்ளது. சி, டி இதில் எதைத் தேர்வு செய்திருந்தாலும் மாணவர்களுக்கு மார்க் அளிக்கலாம் என்றும்கூறியுள்ளது.
இதையடுத்து விடை சியை தேர்வு செய்ததால் மார்க் ரத்து செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மீண்டும்இதற்கான மதிப்பெண்களைத் தந்து மீண்டும் புதிய ரேங்க் பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு அண்ணாபல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று மீண்டும விசாரணைக்கு வருகிறது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தரும் புதிய ரேங்க்பட்டியல் தான் சரியானது என்று நீதிமன்றம் அறிவித்தால், பழைய ரேங்க் பட்டியலின்படி கவுன்சிலிங்குக்கு தேர்வுசெய்யப்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் இடமும் ஒதுக்கப்பட்டுவிட்ட மாணவர்களின் நிலை என்னவாகும் என்றுதெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications