மழை நீரை சேமிக்க வசதியில்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கட்
சென்னை:
தமிழகத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்திலும் மழை நீர் வடிகால் வசதிகள் கண்டிப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்தின்படி, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்அனைத்துக் கட்டடங்களிலும் மழை நீரை சேமிக்க வடிகால் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனிமேல் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில், மழை நீர்வடிகால் வசதி குறித்து கட்டட மதிப்பீட்டிலேயே குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டடத்துக்கு அனுமதிவழங்கப்பட மாட்டாது.
இதற்கேற்ற வகையில் அனைத்து உள்ளூர் நிர்வாக விதிமுறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களுக்கும்,கட்டுமானத்தில் உள்ள கட்டடங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் இந்த வேலைகளை செய்து முடிக்க வேண்டும். அக்டோபர் 10ம் தேதிக்கு மேல் மழை நீர்வடிகால் வசதி இல்லாத கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
மழை நீர் வடிகால் வசதி தொடர்பான பொதுமக்களின் சந்தேகம், உதவிக்கு, சென்னையில் சென்னை குடிநீர்வடிகால் வாரியம், மற்ற பகுதிகளில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள், கிராம பஞ்சாயத்துக்கள்,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
குடிநீரின் மகத்துவத்தை உணர்ந்து, மழை நீரை சேமிக்கும் இந்த பெரும் பணியில் பொதுமக்கள் மிகுந்தஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
தண்ணீர்ப் பற்றாக்குறை என்ற பெரும் பிரச்சினையிலிருந்து மீண்டு, தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக்கஉதவும் இந்தத் திட்டம் வெற்றியடைய பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அக்டோபர் மாத வாக்கில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளதால், அதற்கு முன்பு மழை நீர் வடிகால்வசதியை ஏற்படுத்தி விட்டால், மழை நீரை பெருமளவு சேமித்து வைக்க முடியும் என்ற காரணத்தினால், இந்தத்திட்டத்தை தற்போது அரசு விரைவுபடுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications