சதாம் உசேனின் இரு மகன்கள் சுட்டுக் கொலை
மொசூல்:
ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் மகன்களான உதய் மற்றும் குவாசி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இத்ை தொடர்ந்து சுமார் நான்கு மணி நேரம் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
அமெரிக்கப் படையினர் கனரக ஆயுதங்களால் அந்த மாளிகையைத் தாக்கி தூளாக்கினர். இதையடுத்துமாளிகைக்குள் நுழைந்த படைகள் எரிந்து கிடந்த 4 உடல்களைக் கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர்.
அவை அடையாளம் காணப்பட முடியாத அளவுக்குக் கருகிக் கிடந்தன. ஆனால், நான்கு உடல்களில் இரண்டுஉடல்கள் உதய் மற்றும் குவாசியின் உடல்கள் தான் என அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன. இருப்பினும்டி.என்.ஏ. சோதனைகளுக்குப் பின்னரே அதை உறுதி செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாசின் 14 வயது மகனின் உடலும் அந்தக் கட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்காதெரிவித்துள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தினமும் கொரில்லா தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் சதாமின்மகன்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது அமெரிக்காவும் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.
மெசூல் நகரம் அமெரிக்காவுக்கு ஆதரவான குர்து இனத்தினர் நிறைந்த பகுதியில் உள்ளது. இதனால் இங்குசதாமின் குடும்பத்தினர் பதுங்கியிருப்பதாக யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
இவர்கள் பதுங்கியிருந்த மாளிகை, சதாமின் பாத் கட்சியின் முக்கிய உறுப்பினரான சேக் ஒருவருக்குச்சொந்தமானது என்று தெரிகிறது.
சதாம் மற்றும் மகன்களின் தலைக்கு அமெரிக்கா பெரும் தொகையை அறிவித்துள்ளது. இதனால் பணத்துக்குஆசைப்பட்டே யாரோ இவர்களைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
வீட்டில் சதாமின் மகன்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தவுடனேயே 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களில்200 கமாண்டோக்கள் அங்கு இறக்கப்பட்டனர். மேலும் அமெரிக்க ராணுவ டாங்கிகள், கவச வாகனங்கள் அந்தவீட்டை சுற்றி வளைத்தன.
முதலில் சாதாரண துப்பாக்கித் தாக்குதலுடன் தங்களது தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கப் படைகள் பின்னர்கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தின. இதில் அந்த வீடு பலத்த சேதம் அடைந்து, தீப்பிடித்து எரிந்தது.
மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களிலும் ஏராளமான துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. அத்தோடு கடுமையாகஎரிந்து போயிருந்தன.
சதாமின் மூத்த மகனான உதய் பிளேபாய் வாழ்க்கை நடத்தி வந்தனர். இளைய மகன் குவாசி தான் தந்தைக்குமிகவும் உதவியாக இருந்தார். ரிபப்ளிகன் கார்ட் படைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரும் அவரே.
சதாமுக்கு அடுத்து ஆட்சிக்கு வருவதாக இருந்தார் குவாசி.
இந் நிலையில் சதாம் ஹூசேனும் அவரது மனைவியும் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications