ஆற்காடு வீராசாமி ரூ. 20 கோடிக்கு சொத்து குவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் வீடுகள், மற்றும் அவரது தம்பி,மகன்கள், மகள், சம்பந்தி ஆகியோரின் வீடுகளிலும், காகித ஆலைகளிலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்றுஅதிரடி சோதனை நடத்தினர்.

இதில் வீரசாமியின் குடும்பத்தினருக்கு ரூ. 20 கோடிக்கு சொத்து இருப்பது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புப்போலீசார் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. அவர் மீது அதிமுகஆட்சியில், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் 12 இடங்களில்அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் 6 இடங்கள், திருவள்ளூரில் 3, வேலூர், கோவையில் தலா ஒருஇடங்களில் சோதனை நடந்தது. மேலும் ஹைதராபாத்திலும் ஒரு வீட்டில் சோதனை நடந்தது.

காலை 5.30 மணியளவில் இந்த அனைத்து இடங்களிலும் சோதனைகள் ஒரே நேரத்தில் தொடங்கின.

சென்னை அண்ணாநகரில் உள்ள ஆற்காடு வீராசாமியின் வீடு, தம்பி தேவராஜனின் வீடு, அலுவலகம்,ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 2-வது மகன் கலாநிதியின் வீடு,

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள ஆற்காடு வீராசாமியின் வீடு, திருவள்ளூரில் உள்ள 3 காகித ஆலைகள்,

கோவையில் உள்ள மகன் கஜராஜனின் மாமனார் வீடு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சொந்தகிராமத்தில் உள்ள வீடு,

ஹைதராபாத்தில் உள்ள மகள் இந்துமதியின் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடியாகசோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது ஆற்காடு வீராசாமி அவரது அண்ணாநகர் வீட்டில் இருந்தார். போலீஸ் சோதனைகுறித்துத் தெரிய வந்ததும், அதே பகுதியில் வசித்து வரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், ஆற்காடுவீராசாமியின் வீட்டுக்கு விரைந்து வந்தார்.

அதேபோல, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும் ஆற்காடு வீட்டுக்கு வந்தார்.

அவர்களை வீட்டுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. வீட்டின் வெளியே நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின்,இதைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். திமுக பயப்படாது. மிசா, தடா, பொடா என எத்தனை சட்டங்கள்வந்தாலும் திமுகவினரை மிரட்ட முடியாது. இந்த ரெய்டுகளால் திமுகவை ஒன்றும் செய்து விட முடியாது.

ஆட்சிக்கு வந்தது முதல் திமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது ஒன்றுதான் ஜெயலலிதாவின்சாதனையாக உள்ளது என்றார்.

மாலை வரை ரெய்டுகள் தொடர்ந்தன. இதையடுத்து வீராசாமி குடும்பத்தினருக்கு ரூ. 20 கோடிக்கள் சொத்துக்கள்இருப்பதற்கான ஆதரங்கள் சிக்கியிருப்பதாகவும், பெங்கலூர் பழனிச்சாமி, கே.என். நேரு போன்ற பிற மாஜிமந்திரிகளும் ஆற்காடு வீராசாமியின் மகன்களுடன் சேர்ந்து தொழில் நடத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக ஏற்கனவே ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட திமுக அமைச்சர்களின்வீடுகளிலும் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பலமுறை சோதனைநடத்தியுள்ளனர்.

ஆனால், சமயநல்லூர் செல்வராஜ் தவிர்த்த மற்ற யார் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.அவர் மீது மட்டுமே ரூ. 30 லட்சம் சொத்து குவித்ததாக குற்றப் பத்திரிக்கை தாக்கலாகியுள்ளது. இந் நிலையில்கொஞ்ச காலமாக இந்த ரெய்டுகள் ஓய்ந்திருந்தன. இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+