ஊர் சொத்தை எல்லாம் என் சொத்து என்கிறார்கள்: ஆற்காடு வீராசாமி
சென்னை:
யார், யாருடைய சொத்துக்களை எல்லாம் என் சொத்து என்கிறார்கள், எனக்கு சம்பந்தமே இல்லாத வீட்டில் கூடபோய் சோதனை நடத்திவிட்டு வந்திருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புப் போலீசார் என்று ஆற்காடு வீராசமி கூறியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரும், அக் கட்சியின் பொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் வீடுகள், உறவினர்களின்வீடுகள் உள்பட 15 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின்போது ரூ. 20 கோடி மதிப்புள் சொத்துக்கள்கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்காடு வீராசாமியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான வங்கி லாக்கர்களை உடைத்து லஞ்ச ஒழிப்புப் போலீசார்சோதனையிட்டனர்.
ஆனால், அண்ணா நகரில் கனரா வங்கிக் கிளையில் வீராசாமியின் மனைவி கஸ்தூரியின் பெயரில் இருந்தலாக்கரில் ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே இருந்தது. மகன் கஜராஜன் பெயரில் இருந்த இன்னொரு லாக்கரில் 90கிராம் வெளளித் தட்டும் மட்டுமே இருந்தது.
டிரைடன்ட் சாப்ட்வேர்:
ஆனால் லஞ்ச ஒழிப்புப் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இன்லேன்ட் எஸ்டேட், ஜே.கே.பார்ம்ஸ், ஸ்ரீசாரதி சிட்ஸ், கோடக் மகிந்திரா, ஸ்ரீதேவி என்டர்பிரைசஸ், டிரைடன்ட்சாப்ட்வேர், கீர்த்தி என்டர்பிரைசஸ், வள்ளி என்டர்பிரைசஸ், எஸ்.வி.ஜி. சாப்ட்வேர், ஐகான் இன்னொவேட்டிவ்ஸ்,ஸ்ரீ சவரா சிட் பன்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் ஆற்காடு வீராசாமியின் குடும்பத்தினர் ஏராளமான அளவில்முதலீடுகள் செய்துள்ளது சோதனைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், ஆற்காடு வீராசாமியும், முன்னாள் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, பொங்கலூர் பழனிச்சாமிஆகியோரும் சேர்ந்து நீல்கிரீஸ் சிமென்ட்ஸ் மற்றும் ட்ரூ வேலி ஹோம்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும்நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
ஆற்காடு வீராசாமி, மனைவி கஸ்தூரி, மகள் இந்துமதி, மகன்கள் கஜராஜன், கலாநதி, தம்பி தேவராஜன் ஆகியோர்பலமுறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளனர். அப்போது அங்கு பெரும் தொகையைசெலவிட்டுள்ளனர்.
மொத்தத்தில் ரூ. 20 கோடி அளவுக்கு ஆற்காடு வீராசாமியும், அவரது குடும்பத்தாரும் அசையும், அசையாசொத்துக்களை சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் வீராசாமியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான மற்ற வங்கி லாக்கர்களை உடைத்துசோதனையிடவும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வீராசாமி மறுப்பு:
அண்ணா நகரில் என் வீட்டுக்கு வந்து சோதனையிட்ட போலீசார் எனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரதுவீட்டையும் என் வீடு என நினைத்து சோதனையிட்டுவிட்டு வந்துள்ளனர். யார், யார் சொத்துக்களையோ எல்லாம்என்னுடையது என்கின்றனர்.
காகித ஆலைகளில் சோதனை நடத்தியுள்ளார். அவை யாருடைய ஆலைகள் என்றே தெரியவில்லை.
என் வீட்டில் ஈ.சி.ஜி. எடுத்த பில், மெடிக்கல் பில், மருத்துவருக்கு கட்டிய பில் இதைத் தவிர வேறெதுவும்அவர்களுக்குக் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்த ரூ. 6,000த்தையும் கூட திரும்பக் கொடுத்துவிட்டுப்போய்விட்டார்கள் போலீசார் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications