பள்ளி மாடியில் தூங்கிய ரெளடி வெட்டிக் கொலை
சென்னை:
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியின் மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தரெளடியை சிலர் வெட்டிக் கொன்றனர்.
மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவன் முருகவேல். இவன் அப் பகுதியின் பயங்கர ரெளடி. ஏராளமான கொலை,கொள்ளை வழக்குகள் இவன் மீது உள்ளன.
நேற்று காமாட்சி என்ற பெண்ணிடம் முருகவேல் தகராறு செய்துள்ளான். அதன் பின்னர் இரவுமுண்டகக்கன்னியம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சிப் பள்ளிக் கூடத்தின் மாடிக்குச் சென்று தூங்கினான்.
இன்று காலை அவன் பிணமாக கிடந்தான். சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் அவனது உடல் கிடந்தது.காமாட்சியின் மகன் சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள்தான் முருகவேலைக் கொன்றிருக்க வேண்டும் என்றுபோலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
தினமும் ஏதாவது ஒரு வீட்டு மாடியிலோ அல்லது அலுவலக, பள்ளி மாடிகளிலோ அடாவடியாகப் போய்த்தூங்குவானாம் முருகவேல். நேற்றும் வழக்கம்போல் பூட்டப்பட்டிருந்த மாநகராட்சிப் பள்ளியின் சுவர் ஏறிக்குதித்துப் போய் தூங்கியுள்ளான்.












Click it and Unblock the Notifications