பொது சிவில் சட்டத்துக்கு காஞ்சி மடம் ஆதரவு: விஷப் பரீட்சை என்கிறார் கருணாநிதி
சென்னை:
நாடு முழுமைக்கும் ஒரே மாதியான சிவில் சட்டத்தை கொண்டு வரலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனைகூறியுள்ளதற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வமிகள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆனால், இது குறித்து ஒருமுறைக்கு ஓராயிரம் முறை நன்கு யோசித்து, நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்துதான் முடிவெடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு விசாரணையின்போது பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி காரே, நாடு முழுமைக்கும் ஒரேசிவில் சட்டம் இருக்க வேண்டும். நாடு சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் பொதுவான சிவில்சட்டம் கொண்டு வர நாடாளுமன்றம் முயற்சிக்காதது வருத்தம் தருகிறது என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சி என சிறுபான்மையின அமைப்புகள் கூறுகின்றன.
ஆனால், பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பா.ஜ.க. தலைமை நீதிபதியின் கருத்தைவரவேற்றுள்ளது. இது தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும்ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், இதை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.
காஞ்சி மடம் ஆதரவு:
இந் நிலையில் காஞ்சி மடத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்றத்தின் பபிந்துரையைஅனைத்துக் கட்சி எம்.பிக்களும் மதித்து, பொதுவான சிவில் சட்டத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றுசங்கராச்சாரியார் கேட்டு கொண்டுள்ளார்.
கருணாநிதி அறிக்கை:
கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரலாம் என்று உச்சநீதிமன்றம்யோசனை கூறியுள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது நாடாளுமன்றம்தான்.
அங்கு விரிவான விவாதம் நடத்திய பின்னர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒன்றுக்கு ஓராயிரம் முறை யோசித்து,அவசரப்படாமல், நிதானமாக செயல்பட வேண்டிய விஷயம் இது. அவசரப்பட்டு, விஷப் பரீட்சையில் மத்தியஅரசு இறங்கி விடக் கூடாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications