கடத்தலா? லஞ்ச நாடகமா?: விமான நிலையத்தில் வியாபாரிகள்-போலீஸ் மோதல்
சென்னை:
சிங்கப்பூரிலிந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்களைபோலீஸார் திடீரென பறிமுதல் செய்தனர்.
இவை கடத்தி வரப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் லஞ்சம் வாங்குவதற்காக, முறையாகக்கொண்டு வரப்பட்ட இந்தப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து வைத்துள்ளதாக பொருட்களுக்குச்சொந்தக்காரர்கள் கூறுகிறார்கள்.
சென்னை பர்மா பஜாரில் கடை வைத்திருப்பவர் ஷேக் முகம்மது. இவர் சிங்கப்பூர் சென்று விட்டு அங்கிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்களை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பினார். அவற்றுக்கு சுங்க வரி(கஸ்டம்ஸ் டேக்ஸ்) கட்டிவிட்டு வெளியே கொண்டு வந்தார்.
விமான நிலையத்திலிருந்து பொருட்களை எடுத்து வந்து காத்திருந்த 5 கார்களில் பொருட்களை ஏற்றினர்.
அப்போது அங்கு வந்த மீனம்பாக்கம் விமான நிலைய போலீஸார், அந்தப் பொருட்கள் கடத்தி வரப்பட்டவைஎன்று கூறி பறிமுதல் செய்தனர். 5 கார்களின் டிரைவர்களையும் கைது செய்தனர்.
இதுகுறித்து ஷேக் முகம்மது கூறுகையில், இந்தப் பொருட்கள் சிங்கப்பூரில் வாங்கப்பட்டு, முறையாக சுங்க வரிகட்டப்பட்டவை. இவை திருட்டுப் பொருட்கள் அல்ல, நாங்கள் கடத்தி வரவும் இல்லை. லஞ்சம் வாங்கும்பொருட்டு போலீஸார் வேண்டுமென்றே பொய்யான புகாரின் பேரில் இந்தப் பொருட்களை
வரியைக் கட்டிய பிறகும் பொருள்களைப் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இதனால், எங்களது தொழில் மிகவும்பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனால், இன்ஸ்பெக்டர் குருசாமி கூறுகையில், இந்தப் பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. இவைகடத்தி வரப்பட்ட பொருட்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக கார் டிரைவர்கள் சாதிக், அப்துல்காதர், பாபு, சிவராமன், குணசேகரன் ஆகியோரைக் கைது செய்துள்ளோம் என்றார்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ளவற்றில், 115 செல் போன்கள், 123 விசிடிக்கள், 240 டிவிடிக்கள், ஒரு டிவி, கம்ப்யூட்டர்கேம்ஸ் சாதனங்கள், 105 கம்ப்யூட்டர் பியானோக்கள் ஆகியவை இருந்தன.
இவை தவிர 3 மாருதி, ஒரு டாடா சுமோ, ஒரு அம்பாசடர் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸாரின் நடவடிக்கைக்கு பர்மா பஜார் வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications