அரசு விருந்தினர் இல்ல அலங்கோலம்: மதுரையில் தேவே கெளடா பட்டபாடு
மதுரை:
மதுரை அரசு விருந்தினர் இல்லத்தில் தங்க வந்த முன்னாள் பிரதமர் தேவே கெளடா பெரும் அவஸ்தைக்குஉள்ளானார்.
அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி இல்லை. இதையடுத்து அவர் தனியார்ஹோட்டலில் போய் தங்கினார்.
மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கெளடா இன்று காலை மதுரை வந்தார்.அரசு விருந்தினர் இல்லத்தில் அவருக்காக சில வாரங்களுக்கு முன்பே அறை முன் பதிவு செய்யப்பட்டது.
ஆனாலும், அவர் இன்று காலை விருந்தினர் இல்லத்துக்கு வந்தபோது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தண்ணீர் கூட வரவில்லை.
இதையடுத்து விருந்தினர் இல்ல அதிகாரிகளைச் சந்தித்து தமிழக ஜனதா தளத் தலைவர் ஜான் மோசஸ் புகார்சொன்னார். ஆனால், அவர்கள் பதிலேதும் சொல்லாம் நின்று கொண்டிருந்தனர்.
இதனால் மனம் வெறுத்துப் போன கெளடா தனியார் ஹோட்டலில் உடனே ரூம் புக் செய்யுமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து தனியார் ஹோட்டலுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இது குறித்து ஜான் மோசஸ் கூறுகையில், விருந்தோம்பலுக்குப் பெயர் போனது தமிழகம். மூத்தவர்களைமதிப்பதிலும் நாம் பெருமையான வரலாறு உடையவர்கள். ஆனால், இன்று முன்னாள் பிரதமர் வந்தபோதுஅடிப்படை வசதிகளைக் கூட தமிழக அரசு செய்து தரவில்லை.
அரசின் இந்தச் செயல் தமிழகத்துக்கே தலைகுனிவைத் தேடித் தந்துவிட்டது என்றார்.
இந்த குளறுபடி காரணமாக கெளடாவின் நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தாமதமானது. தாமதமாக வந்த கெளடாநிருபர்களிடம் பேசுகையில், காலையில் சில சம்பவங்கள் நடந்துவிட்டன. நடந்த சம்பவத்துக்கு நான் எந்தவகையிலும் பொறுப்பல்ல. ஆனாலும், தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அவர் பேசுகையில், சீனாவுக்கு வாஜ்பாய் போய் வந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் என பா.ஜ.க. கூறுகிறது.ஆனால், சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்துக்குள் சீன ரோந்துப் படை ஊடிருவிவிட்டுப் போயுள்ளது. மேலும்அந்த மாநிலத்தை இந்தியாவுடையதாக அங்கீகரிக்கவே இல்லை என சீனா கூறியுள்ளது.
இதனால் பத்திரிக்கைகளில் மட்டும் தான் வாஜ்பாயின் சீன பயணத்துக்கு வெற்றி கிடைத்தது. உண்மையில்நிலைமையே வேறாக உள்ளது.
பாகிஸ்தானுடனான பஸ் போக்குவரத்தை வாஜ்பாய் மீண்டும் தொடங்கியது வரவேற்புக்குரியது. ஆனால்,பாகிஸ்தான் விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ். மிக அதிகமாக மூக்கை நுழைக்கிறது.சர்வதேச உறவுகளில் இது போன்ற அமைப்புகளை ஒதுக்கி வைப்பது தான் நாட்டுக்கு நல்லது என்றார் கெளடா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications