டேங்கர் லாரியில் இருந்து கேஸ் கசிவு: கோவை-கேரள நெடுஞ்சாலையில் பரபரப்பு
கோயம்புத்தூர்:
கேரளத்தில் இருந்து கோவை வந்த சமையல் எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து கேஸ் கசிந்தது. இதனால் பெரும்பதற்றம் ஏற்பட்டு, நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் கஞ்சிகோட்டில் உள்ள எரிவாயு நிரப்பு மையத்தில் இருந்து அந்த டேங்கர் லாரி தமிழகம் வந்தது.இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த லாரியில் இருந்து கேஸ் கசிய ஆரம்பித்தது.
அந்த லாரி சென்ற வழியெல்லாம் கேஸ் வாடை பரவியது. இதை உணர்ந்த சில வாகன ஓட்டிகள், உடனேலாரியை முந்திச் சென்று கேஸ் கசியும் விவரத்தைத் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவையில் இருந்து 35 கி.மீ.தொலைவில் நெடுஞ்சாலையிலேயே அந்த லாரி வழியிலேயேநிறுத்தப்பட்டது.
கேஸ் கசிவு மிக அதிமாக இருந்ததால், அதன் அருகே பிற வாகனங்கள் சென்றால், அவற்றின் ஸ்பார்க்பிளக்குகளில் உருவாகும் தீப்பொறியால், தீ விபத்து ஏற்படலாம் என்று கருதிய கேஸ் லாரியின் டிரைவரும்கிளீனவரும் வெகு தொலைவிலேயே வாகனங்களை வழி மறித்து நிறுத்திவிட்டனர்.
இதனால் சாலையின் இரு பக்கமும் ஏராளமான வாகனங்கள் நின்றன. போக்குவரத்து முழுமையாகபாதிக்கப்பட்டது. உடனே இது குறித்து கோவை தீயணைப்புத் துறைக்குத் தகவல் தரப்பட்டது.
தீயணைப்புப் படையினரும் போலீசாரும் விரைந்து வந்தனர். லாரியை அவர்கள் சோதனையிட்டபோதுடேங்கரின் மேல் உள்ள மூன்று மூடிகளில் (வால்வுகள்) ஒன்று உடைந்து போய் இருப்பதால் தான் கேஸ் கசிவதைக்கண்டுபிடித்தனர்.
இதையடுத்து களிமண் நிரம்பிய மூட்டைகளை டேங்கரின் உடைந்த மூடியின் மீது அடுக்கினர். இதையடுத்து கேஸ்கசிவது குறைந்தது. இதைத் தொடர்ந்த அந்த லாரியை மீண்டும் கஞ்சிக்கோட்டில் உள்ள சமையல் எரிவாயுநிரப்பும் தொழிற்சாலைக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.
இச் சம்பவத்தால் இன்று அதிகாலையில் கோவை-கேரள நெடுஞ்சாலையில் சில மணி நேரம் பெரும் பரபரப்புநிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications