அரசு ஊழியர் சங்கங்களுக்கு அங்கீகாரம் ரத்து !
சென்னை:
எதிர்காலத்தில் வேலை நிறுத்தம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்சங்கங்களின் அங்கீகாரத்தையே ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்சங்கங்களுக்கு அரசு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அவர்களுக்கு ஒரு பயனையும் தரவில்லை.மாறாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
எதிர்காலத்தில் வேலை நிறுத்தம் என்பதையே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு தமிழக அரசு பல்வேறுகடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின்அங்கீகாரத்தைப் பறிக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், அரசுப் பணியாளர் கழகம், அரசுக் கல்லூரி ஆசிரியர்கழகம் உள்ளிட்ட மொத்தம் 300க்கும் மேற்பட்ட சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டு அவற்றின் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ்களுக்குப் பதில் வந்தவுடன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.
ஸ்டிரைக்கில் ஈடுபடக் கூடாது, சங்க கணக்கு வழக்குகளை அரசு பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறி இந்த சங்கங்கள் நடந்து கொண்டுள்ளதால் அவற்றின் அங்கீகாரத்தைஏன் ரத்து செய்யக் கூடாது என்று நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற 260 அரசு ஊழியர் சங்கங்களும், 108 ஆசிரியர் சங்கங்களும் உள்ளன. இவைஅனைத்தின் அங்கீகாரத்தையும் ரத்து செய்வதன் மூலம் எதிர்காலத்தில், ஸ்டிரைக் என்ற பேச்சே எழாது என்று அரசுநினைக்கிறது.
இருப்பினும், ஸ்ரீதரன் மற்றும் கு.பாலசுப்ரமணியம் ஆகியோரது தலைமையில் இயங்கும் இரு சங்கங்களிலும்தான்பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஆனால், இந்த சங்கங்களுக்கும் அரசு அங்கீகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications