எதற்கெடுத்தாலும் கஞ்சா கேஸா?: கருணாநிதி கண்டனம்
சென்னை:
அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் கஞ்சா கேஸ் போடுவது வழக்கமாகி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜனுடன் நெருக்கமாக இருந்த மதுரைப் பெண் ஜனனி எனப்படும் செரீனா மற்றும்அவரது தாயார் ரெஜீனா மீது கஞ்சா விற்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து கருணாநிதி கூறியுள்ளதாவது:
அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும், யார் எதிர்ப்பாக செயல்பட்டாலும் அவர்கள் மீது கஞ்சா வைத்திருந்ததாககேஸ் போடுவது வழக்கமாகி விட்டது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், இப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியின் மருமகன் ஒருவர் மீதே இந்த அரசுகஞ்சா கடத்தியதாக வழக்கு போட்டது.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதும் கஞ்சா கேஸ் போடப்பட்டது. அந்த வழக்குகள்எல்லாம் உண்மை என்று சொன்னால் செரீனா மீதான வழக்கும் உண்மை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிமுக ஆட்சியில் நீதிமன்றங்களுக்கு என்ன மதிப்பு தரப்படுகிறது என்பது அரசு ஊழியர்கள் விவகாரத்தைப்பார்த்தாலே புரியும். 1 லட்சம் ஊழியர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்,அதை கண்டுகொள்ளாமல் 30,000 ஊழியர்களை பணியில் சேர அரசு அனுமதிக்கவில்லை என்பது உச்ச நீதிமன்றத்தீர்ப்பை அரசு மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
அழகிரி வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக பத்திரிகைகளில்வெளியாகியுள்ள செய்தி, அழகிரி மீது இன்னொரு பொய் வழக்குப் போட அரசு தயாராகி வருவதையேகாட்டுகிறது.
அன்று திமுக பேரணியில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு பல பேர் உயிரைப் பறிக்க வீரமணியைப்பயன்படுத்திய அதே அதிமுக அரசின் போலீஸார்தான் இன்று அதே வீரமணியின் உயிரையும் பறித்துள்ளார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications