இந்து முன்னணி பேச்சாளர் கொலையில் அல்-உம்மா பாஷா உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை!
கோவை:
கோவையில் இந்து முன்னணி பேச்சாளர் சிவா கொலை வழக்கில் அல்-உம்மா அமைப்பின் தலைவர் பாஷாஉள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை சுக்கிரவார்ப்பேட்டை பகுதியில் கடந்த 1991ம் ஆண்டு சிவா என்ற சிவக்குமார் (வயது 21) கொலைசெய்யப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் வெட்டு விழுந்திருந்தது. இவர் இந்து முன்னணி பேச்சாளர்ஆவார்.
இந்தக் கொலை தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்சா (54), பிலால் ஹாஜியார் (70), ஜாகிர் உசேன் (33),ஷாகுல் ஹமீத் (32), உமர் பாபு (36), சைபூர் ரஹ்மான் (33), ஹாரூண் பாட்சா (36), முகம்மத் சுபேர் (32), தாஜூதீன்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார்.
இந்த வழக்குகோவை 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.முன்னதாக இவர்களிடம் நீதிபதி நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார். அதற்கு இவர்கள்,நாங்கள் குற்றமற்றவர்கள் என பதிலளித்தனர்.
இதன் பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதிபதி முருகன், குற்றம் சாட்டப்பட்ட பாஷா உள்ளிட்ட 9 பேருக்கும்ஆயுள்தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதிப்பதாக அறிவித்தார்.
மேலும், ஜாகிர் உசேன் உள்ளிட்ட 4 பேருக்கு வேறு ஒரு பிரிவில் தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.அதே நான்கு பேருக்கு மற்றொரு பிரிவில் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தீர்ப்புக்குப் பின் வெளியே வந்தபோது, கோவைக்கு நரேந்திர மோடிவரக் கூடாது. வந்தால் கடும் விளைவுகளைசந்திக்க நேரிடும் என்று ஜாகிர் உசேன் கோஷமிட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 9 பேரும் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார்கள் என்றுஅவர்களது வக்கீல் தெரிவித்தார்.
முன்னதாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.துப்பாக்கிய ஏந்திய ஆயுதப் படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications