வரதட்சணை கொடுமை: கல்லூரி விரிவுரையாளர், தாய், சகோதரிகள் கைது
தேனி:
வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்திய கல்லூரி விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார். அவரதுதாயார் மற்றும் இரு சகோதரிகளும் கைதாகியுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 29) கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக உள்ளார்.இவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த இளமதிக்கும் (வயது 27) இரு ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது. மின்வாரியத்தில் இளமதி தாற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந் நிலையில் ரமேஷ் மீது இளமதி போலீசாரிடம் வரதட்சணை புகார்கொடுத்துள்ளார். பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வரச் சொல்லி கணவர் துன்புறுத்துவதாக அதில் இளமதிகுறிப்பிட்டிருந்தார்.
ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை, இதையடுத்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் இளமதி மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி நடவடிக்கை எடுக்கும்படி சின்னமனூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமணத்தின்போது இளமதியின் பெற்றோர் அவருக்கு 84 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புக்கு சீர் வரிசைதந்துள்ளனர். இளமதியின் வேலையை நிரந்தரமாக்க அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் பணம் தர வேண்டி இருந்ததால்அதை வாங்கி வரும்படி இளமதியை ரமேஷ் வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த விவரங்கள் போலீஸ் விசாரணையில் உறுதியானதையடுத்து ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரது தாயார் மரிய செல்வம்(வயது 62), சகோதரிகள் மாலா, செல்வி ஆகியோரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரமேஷை உத்தமபாளையம் துணை ஜெயிலிலும், மற்றமூவரையும் நிலக்கோட்டை துணை ஜெயிலிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில்தள்ளப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications