அவதூறு வழக்கு: என் செலவையும் அரசே ஏற்க வேண்டும்- இளங்கோவன்
சென்னை:
என் மீதும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் அரசு தொடரும் அவதூறு வழக்குகளுக்கு ஆகும் செலவை தமிழகஅரசே ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அரசுக்கு எதிராக கருத்து சொன்னால், மக்கள் பிரச்சினைகள் குறித்துக் கருத்துக் கூறினால் அவர்கள் மீது பொய்வழக்கு போடுவது இந்த ஆட்சியின் பொழுது போக்காகி விட்டது. இதுபோன்ற அவதூறு வழக்குகளில் இருதரப்புக்கும் ஆகும் செலவை, தமிழக அரசே ஏற்க வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நான் மனுத் தாக்கல்செய்யவுள்ளேன்.
தமிழ்நாட்டில் இப்போது கஞ்சா கேஸ் போடுகிறார்கள் என்றால் அது பொய் வழக்கு என்றாகி விட்டது. மதுரையில்ஜனனி என்ற செரீனா என்ற பெண்ணின் மீதும், அவரது தாயார் மீதும் கஞ்சா கேஸ் போடப்பட்டுள்ளது.அவர்களுக்குப் பின்னணியில் சில ரிெபய மனிதர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் யார், செரீனாவின் பின்னணி என்ன என்பதை போலீஸார் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படிஅனைவரையும் பணியில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் செயல்பட்டு வருகிறேன்.அதுபோலவே, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதில் சோ.பா. அவர்களும்முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.
ஆனால், இதை விரும்பாத ஒரு சில சக்திகள்- அவர்கள் கட்சிக்கு உள்ளேயும் இருக்கிறார்கள், வெளியேயும்இருக்கிறார்கள்- எங்களைக் கவிழ்க்கும் வேலைகளில் கைகோர்த்து செயல்படுகிறார்கள். அவர்களைக் கண்டு நான்பயப்படப் போவதில்லை.
அந்த சக்திகளை (வாசன் கோஷ்டியை) அவர்களை ஒரு பொருட்டாகவே நான் நினைப்பதில்லை. காங்கிரசில்இரண்டு வகை உண்டு. ஒன்று கட்சி வளர்ச்சியில் ஈடுபடும் கூட்டம். இன்னொன்று மேலிடத்தில் இன்னொருவரைப்பற்றி புகார் கூறிக் கொண்ட திரியும் கூட்டம்.
டெல்லிக்குச் செல்லும் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் புகார் கூறுவதிலேயேநேரத்தைக் கழிக்கிறார்கள். இவர்களது கோரிக்கைகளையும் புகார்களையும் சோனியா குப்பையில் தூக்கிப்போடுவார்.
நரேந்திர மோடியை தமிழகத்துக்குள் வர அரசு அனுமதிக்கக் கூடாது. குஜராத்தில் அவர் செய்த அட்டூழியங்கள்ஒரு கருப்பு வரலாறு என்றார் இளங்கோவன்.
இந் நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற வாசன் கோஷ்டியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், தலைவர் பதவியிலிருந்துசோ.பாலகிருஷ்ணனையும், செயல் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனையும் நீக்கிவிட்டு மாநிலத்தலைவராக வாசனையே நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
இந்தக் கோரிக்கை தான் குப்பைக்குப் போகும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications