பொது சிவில் சட்டம் வேண்டும்.. ராமருக்கு கோவில் கட்ட வேண்டும்: ஜெயலலிதா
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சினையை எதிர்க் கட்சியினர் தேவையில்லாமல் பெரிதுபடுத்துவதாகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெயலலிதா இன்று காலை வந்தார். இதையொட்டி கட்சிஅலுவலகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. அமைச்சர்கள் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
அங்கு ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தார். அதிமுக தொண்டரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார். பின்னர்பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2,500 பேர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். அவர்களுடன்ஜெயலலிதா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அரசு ஊழியர் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அதுகுறித்து கருத்து ஏதும் கூற முடியாது.எத்தனை பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் இப்போது எதுவும்தெரிவிக்க இயலாது.
நாடு முழுவதிலும் ஒரே மாதியான சிவில் சட்டம் கொண்டு வரப்படுவது இந்த நேரத்தில் அவசியமானது. அதைநான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த சட்டம் அவசியமான ஒன்று. இதனால் சிறுபான்மையினருக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமத்துவம் ஏற்பட இந்தச் சட்டம் வழி செய்யும்.
ராமருக்கு இந்தியாவில்தான் கோவில் கட்ட முடியும். வேறு எங்கு கோவில் கட்ட முடியும்?. எனவே ராமர் கோவில்கட்டும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு கோவில் கட்டப்பட வேண்டும். இது தொடர்பாக பா.ஜ.க.சட்டம் கொண்டு வரப் போவதாக கூறுகிறது. அப்படிக் கொண்டு வந்தால் அதை ஆதரிப்பதா, இல்லையா என்பதைபின்னர் முடிவு செய்வோம் என்றார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications