ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வந்தால் கூட்டணியில் இருந்து விலகுவோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அயோத்தியில ராமர் கோவில் கட்ட பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துதிமுக உடனே விலகும் என்று கருணாநிதி எச்சரித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சி அல்ல. தேசிய ஜனநாயகக்கூட்டணியின் செயல் திட்டப்படி ஆட்சி நடக்கிறது. அந்த செயல் திட்டத்தில் கோவில் கட்ட சட்டம் கொண்டு வரும்யோசனை எல்லாம் இல்லை. அதில் இல்லாத எதையும் பா.ஜ.க. அமலாக்க நினைத்தால் அதை திமுக ஏற்காது.

மேலும் பா.ஜ.கவின் யோசனைகளை எல்லாம் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் ஆதரிக்க வேண்டியஅவசியமும் இல்லை. எங்கள் எதிர்ப்பையும் மீறி சட்டம் கொண்டு வர நினைத்தால் கூட்டணியை விட்டு திமுகவிலகும். ராமர் கோவில் கட்டுவது பிரச்சனை அல்ல, அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அதே போல பொது சிவில் சட்டம் கொண்டு வருவது என்ற பா.ஜ.கவின் திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு முறை, ஒரு வழிபாட்டு முறை உண்டு. இந்த பொது சட்டத்தால் நிச்சயம் குழப்பம்உண்டாகும். இதனால் அந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் திமுக எதிர்க்கும்.

நாட்டின் இப்போதைய தேவை மதங்களின் ஒற்றுமை. மதங்களுக்குக்கான பொது சட்டம் அல்ல என்றார்.

ராமருக்கு கோவிலை இந்தியாவில் தானே கட்ட முடியும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே, அவர்இந்துத்துவாவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி,

அவர் எஙகே போகிறார், வருகிறார் என்றெல்லாம் எனக்குதத் தெரியாது. ஆனால், எல்லா மதத்துக்கும் சேர்ந்து 24லட்சம் கோவில்கள் உள்ளன. இதில்ஆயிரமோ, இரண்டாயிரமோ ராமர் கோவில்களாக இருக்கும். அயோத்தியில்மட்டும் 100 ராமர் கோவில்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் ஊர் திருக்குவளையிலேயே 501பிள்ளையார் கோவில்கள் உள்ளன. இத்தனை கோவில்கள் நாடு பூராவும் இருக்கும்போது சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் கோவில் கட்ட வேண்டுமா? என்றார் கருணாநிதி.

ஜெ. ஆதரவை கோரும் பா.ஜ.க.:

இதற்கிடையே ராமர் கோவில் பிரச்சனையில் பா.ஜ.கவுக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து ஆதரவு அளிக்கவேண்டும் என அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் குமாரவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமர் கோவில் கட்டவேண்டும், பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற பா.ஜ.கவின் கருத்தை ஆதரித்த முதல்வருக்கு நன்றி.வெளிநாட்டவர் பிரதமராகக் கூடாது என்பதிலும் எங்களை ஜெயலலிதா ஆதரிக்கிறார்.

இது போல எங்களுக்கு முதல்வரின் ஆதரவு எப்போதும் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+