சசியுடன் ஜெ. நாளை ஹைதராபாத் பயணம்
சென்னை:
முதலமைச்சர் ஜெயலலிதா நாளை ஹைதராபாத் செல்கிறார். அங்கு ஒரு வார காலம் அவர் ஓய்வில் இருப்பார்.
நாளை மாலை 5 மணிக்கு சிறப்பு விமானத்தில் அவர் அங்கு செல்கிறார். உடன் சசிகலாவும் செல்கிறார். 7ம் தேதிவரை இருவரும் அங்கு தங்கியிருப்பர். அன்றைய தினம் மாலையே அவர் சென்னை திரும்புவார்.
ஹைதராபாத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்கியிருக்கும்போது நடராஜன், சுதாகரன் ஆகியோர் மீது சிலநடவடிக்கைகள் பாயலாம் என்று தெரிகிறது. ஜனனி விவகாரத்தில் நடராஜனையும், அவரது நட்புவட்டாரத்தையும் உளவுப் பிரிவினர் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்துவிட்டனர்.
பண விவகாரத்தில் சுதாகரனின் நண்பர்களையும் போலீசார் குடைந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஹைதராபாத்தில்தங்கியிருக்கும் போது இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
கடந்த முறை ஹைதராபாத்தில் இருந்தபோதே மாஜி வளர்ப்பு மகன் சுதாகரனை உள்ளே தள்ள அங்கிருந்துஉத்தரவு வந்தது. ஆனால், அதை எதிர்பார்தோ என்னவோ அவர் ஒரு தீவுக்கு சுற்றுலா கிளம்பிப் போய்விட்டார்.












Click it and Unblock the Notifications