இனி சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்: அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பள்ளிகளின் வேலை நாள் வாரத்துக்கு 6 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது. இதனால் இனிசனிக்கிழமை முழுநேரமும் வகுப்புகள் நடைபெறும்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் அரசு ஊழியர்களுடன் சேர்ந்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் காலவரையற்ற போராட்டத்தில்ஈடுபட்டனர்.

ஏற்கனவே, அரசு ஊழியர்களுக்கு வேலை நாளை 6 நாளாக உயர்த்தும் திட்டத்தில் அரசு உள்ளது. இதுதொடர்பாக இன்னும் உத்தரவு வெளியாகவில்லை,

ஆனால், ஆசிரியர்களுக்கு மிக அதிகமான விடுமுறை நாட்கள் இருப்பதால் அதைக் கட்டுப்படுத்தும் வகையில்இனி சனிக்கிழமையும் பள்ளிகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவு விவரம்:

மாணவர்களின் நலன் கருதி 2003-04ம் கல்வியாண்டு முதல் கற்றல், கற்பித்தல் நாட்கள், தேர்வுகள், அரசுவிடுமுறை நாட்கள் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கும்படி அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளி கல்வி இயக்குனர்தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின்படி இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கற்றல், கற்பித்தல் வகுப்புகள் ஆண்டுக்கு 186 நாட்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளூர் விடுமுறையாக வருடத்தில்3 நாட்கள் மட்டுமே அறிவிக்கலாம். இதற்கும் கூட மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் முறையான அனுமதிபெற வேண்டும்.

சனிக்கிழமைகளில் பள்ளிகள் முழுநேரமும் செயல்பட வேண்டும். அரைநாள் விடுமுறை கூடாது. பருவஇடைத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் நடக்கும் போது ஆசிரியர்கள் இருவேளைகளிலும் பணியில் இருக்க வேண்டும்.

இவவாறு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+