தண்ணீர் தொட்டியில் கிடந்த செல்லரித்த எலும்புக் கூடு
மதுரை:
மதுரையில் வீட்டு வசதித் துறையின் குடியிருப்பில் பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டியில் இருந்துசெல்லரித்துப் போன மனித எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது யாருடைய உடல் என்றுதெரியவில்லை.
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் ரெளடிகள் அட்டகாசம் அதிகம். இந்தப் பகுதியில் வீட்டு வசதித்துறையின்குடியிருப்பு உள்ளது.
இங்கு தரைக்கு அடியில் ஒரு குடிநீர் சேமிப்புத் தொட்டி உள்ளது. 10 அடி ஆழம் கொண்ட இந்தத் தொட்டிநீண்டகாலமாகவே பயன்படுத்தப்படாமல் இருந்தது. மேலும் இதன் அருகே வீடுகளோ, கடைகளோ இல்லாததால்இங்கு யாரும் அதிகம் செல்வதும் இல்லை.
இந் நிலையில் இங்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற சில சிறுவர்கள் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தபோது அதற்குள்எலும்புக் கூடு கிடப்பதைப் பார்த்து அலறியபடி ஓடிவந்து, அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்துஅவனியாபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து சில கூலியாட்களின் உதவியுடன் குடிநீர்த் தொட்டியில் இருந்து எலும்புக்கூட்டைவெளியே எடுத்தனர். அது சிதிலமடைந்து போய் இருந்தது.
இந்த எலும்புக்கூட்டுடன் மஞ்சள் நிற கட்டம் போட்ட சட்டையும் இருந்தது.
இந்த எலும்புக்கூட்டை தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டு இது 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் என்றுதெரிவித்தனர். மேலும் இந்த நபர் இறந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு உடலை இதற்குள் தூக்கி வீசியிருக்கலாம் என்று தெரிகிறது.
இத்தனை நாட்களாக ஒரு உடல் எப்படி திறந்த தொட்டியில் கிடந்தது என்று தெரியவில்லை. துர்நாற்றம்வீசியதாகக் கூட தகவல் ஏதும் இல்லை. இதனால் வேறிடத்தில் இருந்து எலும்புக் கூட்டை கொண்டு வந்து யாராவதுஇதில் சமீபத்தில் போட்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications