சட்டசபையை உடனே கூட்ட இந்திய கம்யூ. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர், ஆசிரியர் பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழக சட்ட சபையை உடனடியாக கூட்ட வேண்டும்என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சினை இன்னும்தீர்க்கப்படாத காரணத்தால் பொது மக்கள், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் சவர இயங்கவில்லை. இதனால் மாணவர்களின் படிப்புபாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் வறட்சியும், குடிநீர்ப் பற்றாக்குறையும் தலை விரித்தாடுகிறது. இந்த நேரத்தில் அரசு நிர்வாகம் முடங்கிப்போய்க் கிடப்பது கடும் கவலையைத் தருகிறது. இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டசபையின் சிறப்புக்கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications