தலித் பெண்ணை எரித்த தாய், மகளுக்கு சிறை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தலித் இனப் பெண்ணை தீவைத்து எரித்த தாய்க்கும், மகளுக்கும் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே உள்ள ரெட்டக்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர் தலித் இனப் பெண்சித்ரா (வயது 19). இவர் அரங்காகுடி என்ற ஊரைச் சேர்ந்த பெளசியா பேகம் என்பவரது வீட்டில் வேலை பார்த்துவந்தார்.

சித்ராவுக்கும், பெளசியா பேகத்தின் மகன் தமீம் அன்சாரிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்துசித்ராவை கண்டித்துள்ளார் பெளசியா. இந் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி தனது வீட்டுக்கேத் திரும்பிப்போவதாக சித்ரா கூறியுள்ளார்.

அப்போது பெளசியா பேகம், அவரது மகள் பாப்பாக் கனியும் சேர்ந்து சித்ராவைத் தாக்கியதாகத் தெரிகிறது.சித்ராவின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீயும் வைத்துள்ளனர்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். காப்பாற்றப்பட்டு விட்டாலும் அவரால் நடமாடஇயலவில்லை. படுத்த படுக்கையாகவே இருக்கிறார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு பெளசியா மற்றும் பாப்பா கனி இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.இவர்கள் மீதான வழக்கை விசாரித்த தன்மை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சந்திரசேகர்,இருவருக்கும் தலா 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+