நரேந்திர மோடியின் வருகை: கோவையில் வரலாறு காணாத பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கோவையில் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

மோடி நாளை ஒருநாள் சுற்றுப் பயணமாக கோவை வருகிறார். அவர் வருகையை யொட்டி கோவை நகரிலும்,நகரை சுற்றியுள்ள பகுதியிலும் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக விமான நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகை வரையிலும், மற்றும் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திலும், மற்ற முக்கிய சாலைகளிலும், ஹோட்டல்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ்படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆனால், அவர் இந்த விருந்தினர் இல்லத்தில் தங்குவாரா என்று தெரியில்லை. அவர் செல்லும் வழிகளும் தங்கும்இடமும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் நடத்தி வரும் ரத யாத்திரை நாளை கோவை வருவதையொட்டிஅதில் கலந்து கொள்ள மோடி வருகிறார். அவர் வரக் கூடாது என அல்-உம்மாவினர் வெளிப்படையாகவேஎச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில போலீசார் தவிர மத்திய ரிசர்வ் படை போலீசாரும், ஆயுதப் படை போலீசார், பிற மாவட்ட போலீசார் எனசுமார் 6,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். நாளை மறுநாள் காலை நரேந்தர மோடி குஜராத்திரும்பும் வரை இந்த பலத்த பாதுகாப்பு நகர் முழுவதும் அமலில் இருக்கும்.

குஜராத்தில் முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதில் மோடிக்கு நேரடித் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டிவரும் அல் உம்மா அமைப்பினர் அவரைத் தாக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். அதைமுறியடிக்கவே இந்த வரலாறு காணாத பாதுகாப்பு கோவையில் போடப்பட்டுள்ளது.

கோவைக்குள் வரும் முக்கிய சாலைகளில் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகருக்குள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.

மேலும் நகரின் முக்கியமான லாட்ஜ்களிலும் சோதனை நடந்து வருகிறது. பக்கத்து மாவட்டங்களிலும்கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல நகரின் செல்போன்களையும் போலீசார் ஒட்டு கேட்டுவருகின்றனர்.

ரயில்வேதுறையும் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில்ரோந்துப் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சரக்குகளும்பயணிகளும் சோதனையிடப்படுகின்றனர்.

இதற்கிடையில் மோடி தமிழகம் வரக் கூடாது என கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூறியுள்ளன.மோடிக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணிஅறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி துணைப் பிரதமர் அத்வானியின் வருகையின் போது நடந்த தொடர்வெடிகுண்டு விபத்தில் 58 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+