ராமர் கோவில் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு வீரமணி எதிர்ப்பு
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் கி.வீரமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பேன் என்றும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் ஆதரிப்பேன் என்றும்,இந்தியாவில் தானே ராமர் கோவிலைக் கட்ட முடியும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பேசியிருப்பதற்காகவெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம், வருத்தப்படுகிறோம்.
அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியின் ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் பச்சை இந்துத்துவாகொள்கையுடயை ஒரு முதல்வர் கூட சொல்லத் தயங்கும் கருத்தைத் தெரிவித்திருப்பது திராவிட இயக்கத்தில்பரிணாம வளர்ச்சி ஆக முடியாது.
அயோத்தியில் ஆறாயிரம் ராமர் கோவில்கள் உள்ளன. அங்கு ராமர் கோவில் கட்டும் பிரச்சனையால் எவ்வளவுபெரிய மதக்கலவரங்கள் நடந்தன என்பதை முதல்வர் அறியவில்லையா?
கரசேவைக்கு நாங்கள் யாரையும் அனுப்பவில்லை, எதிர்க் கட்சியினர் வீண் பழி போடுகின்றனர் என இதேமுதல்வர் பலமுறை கூறியுள்ளார். ஆனால், இப்போது முரண்பாடான கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூட பிற மதங்களை மதிக்கும் உணர்வை வளர்த்து, சகிப்புத்தன்மையைஉருவாக்கி, ஜாதி-மத வேறுபாடு இல்லாத சூழலை உருவாக்குவோம் என்று தான் கூறப்பட்டுள்ளது. இந் நிலையில்ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வரச் சொல்லி அதை ஆதரிப்பது சரியா?
முதல்வரின் துணிச்சலான செயல்கள், நல்ல செயல்களை பாராட்ட தி.க. தயங்கியதில்லை. அதே நேரத்தில் தவறுசெய்யும்போது கண்டிக்காமல் இருக்க முடியாது. எங்கள் கொள்கைக்கு ஒத்துள்ள கட்சிகளை ஆதரிப்போம். ஒத்துவராத கொள்கைகளை நிச்சயம் எதிர்ப்போம் என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications