குவைத் பெண் தலால் ஆஸ்மி கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
குவைத் பெண் தலால் ஆஸ்மி தனது கணவர் காதர் பாட்சாவுடன் இன்று காலை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில்ஆஜரானார்.
குவைத்தைச் சேர்ந்த இளம் பெண் தலால் ஆஸ்மி, தனது காதலர் காதர் பாட்சாவுடன், போலி பாஸ்போர்ட் மூலம்சென்னை வந்தபோது கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஒவ்வொரு மாதமும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை தனது கணவர் காதர் பாட்சா மற்றும் குழந்தையுடன் கோர்ட்டில் ஆஜரானார்.
பின்னர் காதர் பாட்சா செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளதாகவும், முதல்வர் ஜெயலலிதா தங்களுக்கு உதவுவதாககூறியுள்ளதால், அவரது உதவியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் வசித்து வரும் ஆந்திராவுக்குக் கிளம்பிச் சென்றனர்.
வசதியான குவைத் குடும்பத்தைச் சேர்ந்த ஆஸ்மி, இப்போது காதர் பாட்சாவின் வீட்டில் மிகவும் கஷ்ட ஜீவனம்தான் நடத்தி வருகிறது. திரும்ப குவைத்துக்கே சென்றுவிட விரும்புவதாகவும் தன்னைச் சந்திப்போரிடம் கூறிவருகிறாராம்.


