பெண் கவுன்சிலரின் நூதன போராட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி மன்றக் கூட்டத்தின் போது திமுக பெண் கவுன்சிலர் நாற்காலி மீது ஏறி நின்று பேசிநூதனப் போராட்டம் நடத்தினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சி மன்றக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது திமுக கவுன்சிலர் அமுதா என்பவர்திடீரென்று நாற்காலி மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் மிகவும் மோசமாக உள்ளதாக நகராட்சித் தலைவர்,ஆணையரிடம் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்தே இவ்வாறுசெய்ததாக அவர் தெரிவித்தார்.
அமுதாவை கீழே இறங்குமாறு அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் வற்புறுத்தினர். ஆனால் அவர் இறங்கமறுத்து தொடர்ந்து பேசினார். இதனல் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தை ரத்துசெய்து விட்டு நகராட்சித் தலைவர் வெளியேறினார்.












Click it and Unblock the Notifications