ஜனனியிடம் பிடிபட்ட ரூ. 1.45 கோடி: ஒப்படைக்க கோருகிறது வருமான வரித்துறை
மதுரை:
சசிகலாவின் கணவரால் மதுரை பெண் ஜனனிக்குத் தரப்பட்டதாகக் கருதப்படும் ரூ. 1.45 கோடியை, ஆய்வுக்காகதங்களிடம் ஒப்படைக்குமாறு வருமான வரித்துறையினர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
மதுரை அன்பு நகரைச் சேர்ந்த ஜனனி, அவரது தாயார் ரெஜீனா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கஞ்சாவிற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி போலீஸார் கைது செய்துள்ளனர். 3 பேரும் தற்போது சிறையில் உள்ளனர்.
ஜனனியின் மதுரை மற்றும் சென்னை நீலாங்கரை வீடுகளில் இருந்து போலீஸார் ரூ. 1.45 கோடி பணத்தையும்பறிமுதல் செய்து தங்களது பொறுப்பில் வைத்துள்ளனர்.
சமீபத்தில் இந்தப் பணம் ஜனனிக்கு எப்படி வந்தது என்பது குறித்து வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
இந் நிலையில், இந்தப் பணம் யாருடையது, எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து விசாரிப்பதற்கு வசதியாகரூ. 1.45 கோடி பணத்தையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி மதுரை வருமான வரித்துறை சார்பில் மதுரைபோதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வருகிற 4ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி சம்பத் குமார் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே ஜனனி வீட்டில் பிடிபட்டதாகக் கூறப்படும் கஞ்சா, சமீபத்தில் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டதாதா ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த கஞ்சா தான் ஜனனிவீட்டில் பிடிபட்டதாக கணக்கில் காட்டப்பட்டதாக சில திமுகவினர் கூறுகின்றனர்.


