ஜெ.-சசி ஹைதராபாத் பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் கிளம்பிச் சென்றார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 31,000 ஊழியர்களையும்மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வரை கெடுவிதித்து நேற்று உத்தரவிட்டது.
இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை தனது தோழி சசிகலாவுடன் சிறப்பு விமானத்தில் ஹைதராபாத்கிளம்பிச் சென்றார். (அவர் ஹைதராபாத் செல்லப் போவதை நாம் நேற்று முன் தினமே தெரிவித்தோம்).
அவரது பயணத்திற்கான காரணம் எதையும் அரசு தெரிவிக்கவில்லை. நடராஜன்- ஜனனி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜெ- சசிகலாவின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. போயஸ்கார்டனில் தங்கி இருந்தாலும் கணவர் நடராஜனையும் விட்டுத் தர முடியாமல் சசிகலா தரப்பில் குழப்பம்நிலவுவதாகத் தெரிகிது.
ஹைதராபாத்தில் தங்கியிருக்கும்போது நடராஜன், சுதாகரன் ஆகியோர் மீது போலீஸ் நடவடிக்கைகள் பாயலாம்என்றும் கூறப்படுகிறது.


