For Daily Alerts
Just In
ஜெ. அரசின் சாதனை .. மார்க். கம்யூ. புகழாரம்
பழனி:
அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்த முதல் மாநிலம் என்ற பெயரை ஜெயலலிதா பெற்றுள்ளார்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம்வரதராஜன் பேசுகையில், அராஜக ஆட்சியை நடத்தி வருகிறார் ஜெயலலிதா. இந்த அரசின் சாதனைகளாகஎதையும் கூற முடியவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையும்,சாதனையும்தான் இந்த ஆட்சியில் மிஞ்சியுள்ளது.
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் வீடு வீடாக சென்று நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்ததுமிகவும் கொடுமையான செயல். இதற்கெல்லாம் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் அவர்.


