For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அயோத்தி, பொது சிவில் சட்டம்: ஜெவுக்கு மோடி நன்றி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை & கோவை:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்து பின்னர் கோவை புறப்பட்டுச் சென்றார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரியிலிருந்து ரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.கோவைக்கு தற்போது இந்த ரதம் வந்துள்ளது. ராதாகிருஷ்ணனனின் சொந்த ஊர் கோவை.

இதையொட்டி அங்கு பிரமாண்டமான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை வ.உ.சி.மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

மோடி கோவைக்கு வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சமீபத்தில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்ட அல்-உம்மா கைதிகள், நீதிமன்றத்திலேயே முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து அல்-உம்மாஅமைப்பினரால் மோடிக்கு ஆபத்து நேரிடலாம் என்ற அச்சம் நிலவுவதால், கோவையில் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக இரவு, பகலாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கடுமையாகப்பரிசோதிக்கப்பட்டுகின்றன. ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், லாட்ஜுகளல் தீவிர சோதனைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள், பயணிகள் கடுமையான சோதனைக்குப் பின்னரே நகருக்குள்அனுமதிக்கப்படுகின்றனர்.

நகர் முழுவதிலும் ஆயுதப் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மோடிக்கு மிகத் தீவிரமான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் கோவைமண்டல டிஐடி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று விமானம் மூலம் சென்னை வந்த மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமூகத்துக்காக உழைக்கும்போது உயிருக்கு மிரட்டல்கள் வருவது சகஜம் தான். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். எனக்கு எந்த அச்சமும் இல்லை என்பதைச் சொல்லும் வகையில் தான் கோவை பயணத்தைமேற்கொண்டுள்ளேன்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும் பொது சிவில் சட்டம் கொண்டு வரவும் ஆதரவு தெரிவித்துள்ள முதல்வர்ஜெயலலிதாவுக்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார்.

பின்னர் சிறப்பு விமானத்தில் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார். பகல் 1 மணியளவில் கோவை வந்த அவரைபா.ஜ.கவினர் வரவேற்றனர்.

மாலை 4 மணிக்கு குஜராத்தி சமாஜம் கொடுக்கும் வரவேற்பில் கலந்து கொண்ட மோடி, மாலை 6 மணிக்கு பா.ஜ.க.பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

மோடிக்கு கருப்புக் கொடி:

முன்னதாக கோவையில் நரேந்திர மோடிக்கு, தந்தை பெரியார் திராவிட கழகத் தொண்டர்கள் கருப்புக் கொடிகாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்துக்களும், முஸ்லீம்களும் அமைதியாக வாழ்ந்து கொண்டுள்ள நிலையில் மோடியின் வருகை மதக் கலவரத்தைஏற்படுத்தும் என்று கூறிய அவர்கள் காந்திபுரம் பஸ் நிலையம் அருகே கருப்புக் கொடி காட்டி போராட்டம்நடத்தினர். போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X