For Daily Alerts
Just In
நாஞ்சில் மனோகரனின் 3-வது நினைவு நாள்
சென்னை:
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரனின் 3-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நாஞ்சில் மனோகரன். அவர் மறைந்து இன்றோடு 3ஆண்டுகள முடிகிறது.
இதையொட்டி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, திமுக துணைப்பொதுச் செயலாளர்கள் சற்குண பாண்டியன், பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
அதேபோல, ஓட்டேரியில் உள்ள நாஞ்சில் மனோகரனின் நினைவிடத்திற்கும் ஏராளமான திமுகவினர் ஊர்வலமாகசென்று அஞ்சலி செலுத்தினர்.


