சரவண பவன் ராஜகோபால் ஜாமீனில் விடுதலை
நாகப்பட்டனம்:
ஜீவஜோதியை கடத்த முயன்றதாக கைதாகியுள்ள ஹோட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபால் ஜாமீனில்விடுதலை செய்யப்ட்டார்.
பிரபல ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலும், அவரது வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவரும்ஜீவஜோதியின் சொந்த ஊரான வேதராண்யம் அருகே உள்ள தோத்தகிரிக்குச் சென்றதாகவும், அங்குஜீவஜோதியைக் கடத்த முயன்றதாகவும் கூறி கடந்த மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
பின்னர் வக்கீல் ராஜேந்திரன் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ராஜகோபாலும், அவரது 2 கார்டிரைவர்களும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ராஜகோபால் மற்றும் கார் டிரைவர்களின் காவல் மேலும் 15 நாட்களுக்குநீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராஜகோபால் மற்றும் டிரைவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நாகை மாவட்டசெஷன்ஸ் நீதிபதி இஷாக் அலி, ராஜகோபாலும் மற்றவர்களும் சென்னையில் தங்கி இருக்க வேண்டும். தினசரிசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என் உத்தரவிட்டு 3 பேரையும் விடுதலை செய்யஉத்தரவிட்டார்.
ஆனால், இது கடத்தல் முயற்சியா என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஜீவஜோதியை வழக்கம்போல் தனிமையில்சந்தித்துப் பேசவே ராஜகோபால் சென்றதாகவும் அப்போது ஜீவஜோதியின் மாமாக்கள் பணம் கேட்டுராஜகோபாலை தொல்லைப்படுத்தவே சண்டை ஏற்பட்டு, கடைசியில் கடத்த முயன்றதாக விஷயத்தை அவர்கள்திருப்பியதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications