திருப்பத்தூரில் வீட்டில் புகுந்து கொள்ளை கும்பல் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
வேலூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே இன்று அதிகாலை வீடு புகுந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல்வீட்டிலிருந்தவர்களை சரமாரியாக சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளைக் கும்பல் திருடிச் சென்றது.
திருப்பத்தூர் அருகே உள்ள நாட்டாரம்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர் நேரு. இவரும், சகோதரர் மணிஎன்பவரின் குடும்பம் ஒரே வீட்டில் வசிக்கிறது. இன்று அதிகாலை நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல்நேருவின் வீட்டிற்கு வந்தது.
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளைக் கும்பல், வீட்டிலிருந்தவர்களை சரமாரியாக சுட்டுத்தள்ளியது.
இதில் மணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 5 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் கொள்ளைக் கும்பல்வீட்டில் இருந்த நகைகளை அள்ளிக் கொண்டு தப்பி விட்டது.
காயமடைந்த அனைவரும் திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


