மனநிலை பாதித்த பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு 8 ஆண்டு கடுங்காவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மன நிலை பாதித்த 20 வயதுப் பெண்ணை மானபங்கப்டுத்திய 48 வயது காமக் கொடூரனுக்கு 8 ஆண்டுகடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு வயது 48. கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி,தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த 20 வயதான மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை இவர் பாலியல்பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் தரப்பட்டது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாபு மீது சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.விசாரணையின்போது, மானபங்கப்படுத்தப்பட்ட பெண் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததால், அவ்வாறுசெய்ததாக பாபு வாதிட்டார்.

இவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி விமலா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 20 ஆக இருந்தாலும், மனநிலையைப் பொருத்தவரை அவர் 7 வயது சிறுமியின் நிலையில்தான் உள்ளதாக மன நல மருத்துவர்சான்றளித்துள்ளார். எனவே இதுபோன்ற பெண்களை சிறுமிகளாகவும், குழந்தைகளாகவும் தான் பார்க்கவேண்டும்.

எனவே அந்த நிலையில் உள்ள பெண்ணின் மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு இதுபோன்ற கொடூரசெயல்களில் ஈடுபடுவது மிகவும் மிருகத்தனமானது என்று கூறி பாபுவுக்கு 8 ஆண்டுகடுங்காவல் தண்டனைவிதித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+