ஜனனிக்கு சிறையில் மருத்துவ சிகிச்சை: தாயார் மன நிலை பாதிப்பு?
மதுரை:
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நெருக்கமாக இருந்ததால் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளதாகக்கூறப்படும் ஜனனிக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜனனியும் அவரது தாயார் ரெஜினாவும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஜனனியை பெண் காவல் அதிகாரிகள் வயிற்றில் மிதித்தாதக் தெரிகிறது. இதில் அவருக்கு கருக் கலைப்புஏற்பட்டு ரத்தப் போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இவரது தாயார் ரெஜினா மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. சிறையில்வெறித்த பார்வையுடன் அவர் அமர்ந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட மன நோயாளி போல மாறி வருவதாகவும்தெரிகிறது.
இதற்கிடையே ஜனனியிடம் தங்கலை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு சிறையில்போலீசார் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. பணம் வந்த வழி, நடராஜனுடனான தொடர்பு குறித்து அவர்கள் பலகேள்விகளைக் கேட்டு குடைந்துளளனர்.
ஜனனியின் வழக்கறிஞர் செளந்தர பாண்டியன் கூறுகையில்,
ஜனனியை சிறையில் சிலர் சந்தித்து தங்களை வருமான வரி இலாகா அதிகாரிகள் என்று கூறி ரூ.1.4 கோடி பணம்குறித்து தகவல்களை கேட்டு உள்ளனர். அவர்களிடம் இந்த பணம் சட்டபூர்வமாக சம்பாதித்தது என்று ஜனனிசொல்லி இருக்கிறார்.
தொடர்ந்து அவர்கள் கேட்ட கேள்விகளால் ஜனனிக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்துஜனனி கேள்விகள் கேட்க பதில் சொல்ல முடியாமல் அவர்கள் திணறியுள்ளனர். இதன் பின்னர் தான் அவர்கள்போலீஸ்காரர்கள் என்று ஜனனிக்குத் தெரியவந்தது.
ஜனனி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றவர். நிறைய பொது விவரமும் தெரிந்தவர்.
ஆனால், ஜனனியை பொய்யான கஞ்சா வழக்கு போட்டு நிரந்தரமாக உள்ளே தள்ள போலீசார் முயல்கின்றனர்.இதனால் சென்னையில் சுட்டு கொள்ளப்பட்ட வீரமணியுடன் ஜனனிக்கு காஞ்சா விற்பனையில் தொடர்பு இருந்ததுஎன்று புதுக் கதை கிளப்பி வருகிறார்கள்.
ஜனனி முறையாக வருமான வரி செலுத்தி வருபவர் இதை நிரூபிக்க சில தஸ்தா வேஜூகள் தேவைப் படுகிறது.இதற்காக, அவரது வீட்டுச் சாவி தேவைப்படுகிறது. எனவே வீட்டுச்சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுஇருக்கிறோம். ஆனால், போலீஸ்காரர்கள் வீட்டுச் சாவியை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்துவிட்டதாககூறுகிறார்கள்.
வீட்டு உரிமையாளரோ போலீஸார் சொன்னால்தான் நாங்கள் சாவியை தருவோம் என்கிறார் என்றார்செளந்தரபாண்டியன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications