கந்து வட்டி கொடுமை: மனைவி, 3 குழந்தைகளை கொன்று நகை ஆசாரி தற்கொலை
திருச்சி:
திருச்சியைச் சேர்ந்த நகை செய்யும் ஆசாரி ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கு சயனைட் விஷம்கொடுத்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டிக் கொடுமையால் அவர் இந்தமுடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
திருச்சி சந்துக்கடை செளந்தரபாண்டியன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. அப் பகுதியில் நகைசெய்யும் சிறிய கடை வைத்துள்ளார். கந்து வட்டிக்காரர்களிடம் ஏராளமான கடன் வாங்கி வைத்திருந்த அவரால்கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து நகை செய்ய பயன்படுத்தப்படும் சயனைடு கலந்த ரசாயனத்தை மனைவி லதா, மகன் சீனிவாசன்(13), மகள்கள் சிவரஞ்சனி (10), ஸ்வாதி (4) ஆகியோருக்கு உணவுடன் கலந்து கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அவர்கள் துடிதுடித்து இறந்தனர். அவர்கள் இறந்ததும் தானும் அந்த விஷம் கலந்த உணவைசாப்பிட்டு அவரும் பரிதாபமாக இறந்தார். வீடு நெடு நேரமாகத் திறக்காததால் அண்டை வீட்டினர் ஜன்னல்வழியே உள்ளே எட்டிப் பார்த்தபோது ஐந்து பேரும் வாயில் நுரை தள்ளி இறந்து போய் கிடந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் திருப்பதி செல்லும் வழியில் உள்ள காட்டுப் பகுதியில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரே மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வீட்டின் சுவர் மற்றும் நோட்டுகளில் கந்து வட்டிக்கு பணம் வாங்கியது யார், யாரிடம் அவர்களுக்கு தொடர்ந்துகொடுக்கப்பட்ட வட்டி ஆகியவற்றை குறித்து வைத்துள்ளார் புண்ணியமூர்த்தி. எனவே, இந்தக் கும்பல் மீதுபோலீஸ் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications