கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தியேட்டர்களில் போலீசார் இன்றும் சோதனை
விருதுநகர்:
முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீடு, தியேட்டர், நூற்பாலையில் நேற்று அதிரடி சோதனைநடத்திய லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்றும் அவரது இரண்டு தியேட்டர்களிலும் சோதனை நடத்தினர்.
மாவட்ட வாரியாக திமுக தேர்தல் நிதி திரட்டி வருவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, நேரு, கோ.சி.மணிஉள்ளிட்ட பலர் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாகஅவர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
இந் நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய விருதுநகர் மாவட்ட திமுக செயலாளரும், விருதுநகர்எம்.எல்.ஏ.வுமான சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீடு, தியேட்டர் மற்றும் நூற்பாலையில் லஞ்சஒழிப்புப் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
டி.எஸ்.பி. பிரபாகர் தலைமையிலான போலீஸ் படை இந்த சோதனையில் ஈடுபட்டது. சோதனையின்போது என்னகைப்பற்றப்பட்டது என்பது குறித்து போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந் நிலையில் இன்றும் சோதனை தொடர்ந்தது. ராமச்சந்திரனுக்குச் சொந்தமான 2 தியேட்டர்களிலும் இன்றுசோதனை நடத்தப்பட்டது. தியேட்டர்களின் நீள, அகலம் ஆகியவற்றையும் அதிகாரிகள் அளந்தனர்.
இந்தச் சோதனைகள் குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது:
திமுக முன்னணி தலைவர்களின் வீடுகளில் தற்போது சோதனை நடந்து வருகிறது. என் நிறுவனங்களிலும் சோதனைநடக்கும் என்று முன்பே எதிர்ப்பார்த்தேன்.
நான் கணக்குகளிலோ, வருமானத்திலோ எவ்வித குளறுபடியும் செய்யவில்லை. முறையாக அனைத்துமேபராமரிக்கப்பட்டு வந்துள்ளது. என்னை தொந்தரவு செய்வதன் மூலம் திமுகவுக்கு தேர்தல் நிதி வசூலிக்கும் எனதுநடவடிக்கையை தடுக்க நினைக்கின்றனர்.
இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையே. இதன் மூலம் என்னை முடக்கிவிட முடியாது. நான் எதற்கும் தயாராகஇருக்கிறேன் என்றார்.


