கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மீட்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளம் என்ற கிராமத்தில், கிராம நிர்வாக அதிகாரியைகிராமத்தினர் பல மணி நேரம் சிறை பிடித்து வைத்து தாக்கியுள்ளனர்.

சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசுஅறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்குகிறது.

இந்த நிதி வழங்குவதில் பல்வேறு பகுதிகளில் குளறுபடிகள் நடப்பதாக விவசாயிகள் கூறி வருகிறார்கள். இதனால்பல்வேறு இடங்களிலும் மோதல்கள், முற்றுகைகள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இதேபோல, உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் நேற்று கிராம நிர்வாக அதிகாரியைப்பிடித்து வைத்துக் கொண்ட கிராமத்தினர் அவரை சட்டையைப் பிடித்து இழுத்தும், கன்னத்தில் அடித்தும் தாக்கினர்.

வறட்சி நிவாரணம் பெற வேண்டிய விவசாயிகள் பட்டியலைத் தயாரிப்பதில் அவர்பாரபட்சமாக நடப்பதாக கூறி பல மணி நேரம் அவரை சிறைப் பிடித்து வைத்துக் கொண்டனர்.

தகவல் அறிந்ததும் துணைத்தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கிராம நிர்வாக அதிகாரியைமீட்டனர். கிராமத்தினர் பிடியில் சிக்கியிருந்த கிராம நிர்வாக வெளிறிப் போன முகத்துடன் காணப்பட்டார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் யார் என்ற பட்டியலைத் தயாரிக்கும்போது, அரசியல்வாதிகளின் குறுக்கீடு காரணமாககிராம நிர்வாக அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+