ரெளடி வீரமணி- நடிகைகள் தொடர்பு: வெளியாகும் திடுக் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுட்டுக் கொல்லுப்பட்ட ரெளடி வீரமணிக்கும் நடிகைகளுக்கும் இருந்த தொடர்புகள் குறித்து சினிமா ஸ்டண்ட்மாஸ்டர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பல்லு குமார் என்ற வீரமணியின் கூலியாள் பல திடுக்கிடும் தகவல்களைத் தந்துள்ளான்.

கால்ஷீட் கொடுத்துவிட்டு ஊட்டியில் போய் உட்கார்ந்து கொண்டு சூட்டிங்குக்கு வர மறுத்த நடிகர் கார்த்திக்கைகடத்திச் சென்று வைத்து சித்திரவதை செய்ததாக அந்த ஸ்டன்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார். இதற்காக அந்தப்படத்தின் தயாரிப்பாளரிடம் சில லட்சங்களை வீரமணி கறந்துள்ளான்.

மேலும், விபச்சார வழக்கில் பிடிபட்ட புவனமான டிவி நடிகையை பலமுறை தனது படகில் கடலுக்குள் கொண்டுசென்று அனுபவித்துள்ளான்.

முன்னாள் குலுக்கல் நடனமணி ஒருவர் வீரமணிக்கு மிகவும் நெருக்கமாம். டிஸ்கோவான அந்த நடிகைவீரமணியுடனேயே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இவர் தவிர மானின் பெயர் கொண்ட மாஜி நடிகையை பணத்தில் குளிப்பாட்டியுள்ளான் வீரமணி. கண் அழகுக்குப்பெயர் போன நடிகையை வீரமணி தன் உல்லாசத்துக்கு அழைக்க, அவன் கையில், காலில் விழுந்து ரூ. 2 லட்சம்பணத்தைத் தந்துவிட்டு தப்பியுள்ளார் அந்த நடிகை.

இதற்கெல்லாம் அந்த சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் தான் புரோக்கராக இருந்துள்ளார். இதையடுத்து அந்த ஸ்டன்ட்மாஸ்டரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சுடப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக ஆளும் கட்சியினருடன் வீரமணி மோதியுள்ளான்.ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு, எதிரே உள்ள மீனவ குப்பங்களையும் காலி செய்துவிட்டு அங்கு புதியதலைமைச் செயலகம் கட்ட அரசு முடிவு செய்ததால் அதை எதிர்த்து வீரமணியின் ஆட்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இதனால் அதிமுகவினருடன் அவனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

மீனவ குப்பங்களை அகற்றினால் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் சேர்ந்துவிடப் போவதாகவும், திமுக பேரணியில்அதிமுக சொல்லித் தான் வன்முறையை நடத்தினேன் என்று நிருபர்களை அழைத்துப் பேட்டி தரவும் அவன்திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்தத் தகவல் உளவுப் போலீசார் மூலம் காவல்துறை தலைமைக்குக் கசிந்ததாகவும் கூறுகின்றனர் அவனுக்குநெருக்கமானவர்கள். இதையடுத்தே என்கெளண்டர் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+