குடிபோதையில் ரோட்டில் கலாட்டா செய்த அரசு வழக்கறிஞர் !
சென்னை:
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட அரசு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரிவழக்கறிஞர் ஊர்வலமாக சென்று நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்தவர் அபிடுகுமார். இவர் அரசு வழக்கறிஞராக உள்ளார். நேற்றிரவு தனது நண்பர்களோடுசென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு ஓட்டலில் குடித்துவிட்டு வெளியே வந்து ரகளையில் ஈடுபட்டார்.அவரது நண்பர்களும் ரோட்டில் கலாட்டா செய்தனர்.
இதையடுத்து இரவு ரோந்து வந்த போலீசார் வழக்கறிஞர் அபிடுகுமாரையும், அவரது நண்பர்களையும் கைதுசெய்தனர்.
இதை தொடர்ந்து இன்று காலை சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசுக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகனகராஜிடம் சென்று அரசு வழக்கறிஞர் அபிடுகுமாரை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், அவரை உடனேவிடுதலை செய்யக் கோரியும் மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications