டி.எஸ்.பி.யிடமே மாமூல் கேட்ட போலீஸ்காரர் கைது

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே, குடிபோதையில் டி.எஸ்.பி.யின் ஜீப்பை வழிமறித்து நிறுத்தி, மாமூல்கேட்ட காவலர் கைது செய்யப்பட்டார்.

ஆயுதப் படைக் காவலராக பணியாற்றி வருபவர் முத்துச்சாமி. இவருக்கு மோகனூரில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.ஆனால் அங்கு போகாமல் நன்றாக குடித்துள்ளார். பின்னர் தனது சொந்த ஊரான சேந்தமங்கலத்திற்கு அருகேஉள்ள ராமநாதபுரம் புதூருக்குச் சென்றார்.

அங்கு நெடுஞ்சாலையில் நின்று கொண்டு வருகிற வாகனங்களை எல்லாம் நிறுத்தி மாமூல் வாங்கினர். பின்னர்சாலையில் சென்றவர்களை தாறுமாறாகத் திட்டினார். அப்போது அந்த வழியாக பயிற்சி டி.எஸ்.பி. ராஜராஜன்இருந்த ஜீப் வந்தது.

அந்த ஜீப்பையும் வழிமறித்த முத்துச்சாமி, டி.எஸ்.பி.யிடம் மாமூல் கேட்டார். அதிர்ச்சியடைந்த டிஎஸ்பிமுத்துச்சாமியை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து முத்துச்சாமி கைது செய்யப்பட்டு, ஜீப்பில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டார். அவர் மீது பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+