ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 17.49 லட்சம்
ஈரோடு:
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 17.49 லட்சத்தைரயில்வே போலீசார் கைப்பற்றினர்.
ஈரோடு ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்தப் பணம் சிக்கியது.
சென்னை- திருவனந்தபுரம் ரயில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் ஈரோட்டை அடைந்தது. அப்போதுவழக்கமாக சோதனையில் ரயில்வே போலீசார் ஈடுபட்டனர். அன்-ரிசர்வ்ட் பெட்டியில் போலீசார்சோதனையிட்டபோது ஒரு பை கிடந்தது.
அந்தப் பை தங்களுடையது அல்ல என அந்தப் பெட்டியில் இருந்த அனைத்துப் பயணிகளும் தெரிவித்தனர்.இதையடுத்து அந்தப் பையை போலீசார் சோதனையிட்டபோது அதில், ரூ. 17,49,000 பணம் இருந்தது.
500 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் கட்டுக்களாக அந்தப் பணம் இருந்தது.
இதையடுத்து அந்தப் பையை அந்த இடத்திலேயே வைத்தவிட்ட போலீசார் அதை திருவனந்தபுரத்தில் யாராவதுஎடுக்க வருகிறார்களா என்று பார்ப்பதற்காக மப்டியில் சில போலீசார் அந்த ரயிலேயே சென்றனர்.
ஆனால், அதை யாரும் எடுக்க வரவில்லை.
இதையடுத்து அநத்ப் பணத்தைக் கைப்பற்றிய போலீசார் ஈரோட்டுக்குக் கொண்டு வந்தனர். இது ஹவாலாபணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பணத்தை ஈரோடுமாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications