மதுரை நீதிமன்றத்துக்கு பெட்ரோல் வெடிகுண்டு மிரட்டல்
மதுரை:
ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் மதுரை நீதிமன்றத்தின் மீது பெட்ரோல் பாம்கள் வீசப்படும் என்று மிரட்டல் கடிதம்வந்துள்ளது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிபதி ஒருவருக்கு வந்த இக் கடிதம் குப்புசாமி என்பவரின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 12ம்தேதிக்குள் எந்த நேரமும் பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடக்கும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அண்ணா நகர் போலீசாருக்கு நீதிமன்ற அதிகாரிகள் தகவல் தந்தனர்.
அழகிரி, ஜனனி என அரசியல்ரீதியில் முக்கியமான வழக்குகள் மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும்நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளது.
இந்த மிரட்டலையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்மோப்ப நாய்களைக் கொண்டு போலீசார் நீதிமன்றக் கட்டடம் முழுவதும் சோதனையும் நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்துக்கு வருபவர்களின் பைகள், வழக்கறிஞர்களின் கோர்டுகள் கூட சோதனையிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications