For Quick Alerts
For Daily Alerts
Just In
உசிலம்பட்டி எம்.எல்.ஏவின் மருமகன் பெங்களூரில் தற்கொலை
பெங்களூர்:
பெங்களூரில் மத்திய நீர் வளத்துறையில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்த உசிலம்பட்டி பார்வர்ட் பிளாக்கட்சியின் எம்.எல்.ஏ. சந்தானத்தின் மருமகன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் (42). பெங்களூர் பீனியா பகுதியில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். இவர் எம்.எல்.ஏ. சந்தானத்தின் மகள்சரோஜினியின் கணவராவார். இவர்களுக்கு மகனும் மகளும் உள்ளனர்.
இவர்கள் ராஜாஜிநகரில் வசித்து வந்தனர். இந் நிலையில் சரோஜினி வெளியே சென்றிருந்த நிலையில் இரவு 7மணியளவில் தனது வீட்டின் மின் விசிறியில் பாலசுப்பிரமணியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.


