ராணி மேரிக் கல்லூரி இடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்டுவதை எதிர்த்து தாக்கலான வழக்கு விசாரணைமுடிந்துவிட்டது. இதையடுத்து, தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்டுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்அறிவித்தார். இதையடுத்து பல பொது நல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகின.
இந் நிலையில் கடலோரங்களில் ரூ. 5 கோடிக்கு மேலான மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டுவதைத் தடுக்கவும்,பாரம்பரிய கட்டடங்களை இடிப்பதைத் தடுத்தும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு ஒருஉத்தரவைப் பிறப்பித்தார்.
இதனால் ராணி மேரிக் கல்லூரியை இடிப்பதில் சிக்கல் எழுந்தது. மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
பாலுவின் உத்தரவு அரசியல்ரீதியிலானது என்று அதில் தமிழக அரசு கூறியிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்துவந்தது. நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுற்றுச்சூல் துறையின் சார்பில் மூத்தவழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடினார்.
அவர் கூறுகையில், இந்த விவகாரம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான பிரச்னை. அரசியல்சட்டத்தின் 131வது பிரிவின்படி இது போன்ற வழக்கை உச்ச நீதிமன்றம் தான் விசாரிக்க முடியும்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அரசியல்ரீதியில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடலோர கட்டடங்களைஒழுங்குப்படுத்தவே இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.
அப்போது இடைமறித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, அது என்ன ரூ. 5 கோடிக்கு மேல் செலவில் கட்டடம்கட்டக் கூடாது என்ற இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்? ரூ. 5 கோடிக்குக் கீழான மதிப்பில் கட்டடம் கட்டினால்சுற்றுச் சூழல் பாதிக்கப்படாதா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஹரீஷ் சால்வே, இது போன்ற அறிவிப்பை வெளியிட மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு.இந்த உத்தரவை வெளியிடும் முன் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பக் கூட தேவையில்லை. எனவே,எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை என்று சொல்லிக் கூட மாநில அரசுகள் வழக்குப் போட முடியாது. மத்தியஅரசுக்கு முழு அதிகாரம் உண்டு.
மத்திய சுற்றுச்சூழல்துறை தமிழகத்துக்கு மட்டும் இந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. இந்தியா முழுமைக்கும் இதுபொறுந்தும். மத்திய அமைச்சர் வேறு கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மாநில அரசின் முடிவுக்கு எதிராகசெயல்படுவதாகக் கூற முடியாது. மத்திய- மாநில அரசு மோதலை அரசியலாக்கும் இது போன்ற மனுக்களைநீதிமன்றம் ஊக்குவிக்கக் கூடாது என்றார்.
இதையடுத்துப் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன், கடலோர கட்டட வரையறைசட்டம் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு அல்ல. இது தனிப்பட்ட முறையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பிறப்பித்த உத்தரவு.
ராணி மேரிக் கல்லூரி இடிப்பு தொடர்பாக அவர் பொதுக் கூட்டங்களில் பேசிய பேச்சுக்களையும் நீதிமன்றம்கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.


