பாண்டிச்சேரி பல்கலை. துணை வேந்தருக்கு அடி, உதை: தமிழை கேவலப்படுத்தியதால் மாணவர்கள் ஆத்திரம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

தமிழ் விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் வி.டி.பாட்டீல்தாக்கப்பட்டார்.

அவரது தமிழ் விரோத நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக ஊழியர்களே அவரை அடித்து,உதைத்தனர்.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.டி.பாட்டீல். கன்னடரான இவர் பாண்டிச்சேரி மத்தியபல்கலைக் கழக துணைவேந்தராக இருந்து வந்தார். நேற்றுடன் இவர் ஓய்வு பெற்றார்.

துணை வேந்தராக பதவியேற்றது முதல் தமிழ், தமிழர் விரோத நடவடிக்கைகளில் பாட்டில் இறங்கியதாகத்தெரிகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த தமிழ்ப் பெயர்களை அழித்து விட்டு, சமஸ்கிருத, வட நாட்டுப் பெயர்களைசூட்டினார். மேலும், பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை பாடக் கூடாது என்று தடைவிதித்தார். சுத்தமான தமிழ்ப் பெயர்கள் கொண்டவர்களைப் பார்த்தால் கேலி செய்வாராம்.

பாட்டீலின் தமிழ் விரோத நடவடிக்கை பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாண்டிச்சேரியின் பல்வேறு கட்சிகளும் பாட்டிலுக்கு எதிராக போராட்டங்கள்நடத்தின.

இருப்பினும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந் நிலையில் பல்கலைக்கழகப் புத்தகங்கள் பதிப்பிப்பதில் அவர் பெருமளவில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.அந்தப் புகாரில் உண்மை இருப்பதும் விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் உறுதியானது.

குடியரசுத் தலைவர் வரை இந்தப் பிரச்சினை சென்றது. இருப்பினும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந் நிலையில் நேற்றுடன் இந்தப் பாட்டீல் ஓய்வு பெற்றார். இதை மிகுந்த சந்தோஷத்துடன் பல்கலைக்கவளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும், ஊழியர்களும் கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் னிப்பு வழங்கி,கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

அப்போது தனது வீட்டுக்குச் செல்வதற்காக பாட்டீல் பல்கலைக்கழக வளாகத்தில் வந்து கொண்டிருந்தார். அவரைப்பார்த்ததும் ஆத்திரமடைந்த ஊழியர்கள் சிலர் அவரை நோக்கி ஓடினர்.

பாட்டீலை பிடித்துக் கீழே தள்ளி மிதித்தனர். பலர் அவரது முகத்தில் குத்தினர். சரமாரியாக தாக்கப்பட்டார் பாட்டீல்.கன்னட வெறியன் பாட்டில் ஒழிக என்று கூறிக் கொண்டு அடித்தனர்.

அவரைக் காப்பாற்ற வந்த உதவியாளர் அருணகிரி என்பவருக்கும் அடி, உதை விழுந்தது.

பின்னர் சில பேராசிரியர்கள் தலையிட்டு பாட்டீலை மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகபோலீசிலும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+