பொதுமக்களிடம் கலாட்டா செய்த 10 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அண்ணா நகர் பகுதியில் குடித்து விட்டு பொதுமக்களிடம் கலாட்டா செய்த 10 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
அண்ணா நகர் டவர் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் சாலையில் வருகிற, போகிறவர்களிடம்கலாட்டா செய்தது. இது குறுத்து அண்ணா நகர் போலீஸாருக்கு பொது மக்கள் புகார் தந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த அண்ணா நகர் போலீஸார், கலாட்டாவில் ஈடுபட்ட 10 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் 15 நாள் நீதிமன்றக் காவலில்வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications