உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஊழியர்களின் உரிமையைப் பாதிக்கும்: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலை நிறுத்தம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, ஊழியர்களின் உரிமையைப் பாதிக்கும்வகையில் உள்ளதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளையொட்டி நடந்த கூட்டத்தில் இளங்கோவன்பேசுகையில், தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்காகவே ஊழியர்கள் போராட்டங்கள் நடத்துகிறார்கள்.
எனவே வேலை நிறுத்தம் செய்யக் கூடாது என்று கூறுவது, ஊழியர்களின் உரிமையைப் பாதிப்பதாக அமையும்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்புக்கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவை கடுமையாகஉயர்த்தப்பட்டுள்ளது. அதே போல மின்சாரக் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மத்திய வர்க்கத்தினரை தமிழக அரசு வாட்டி வதைத்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications