ஜெ. ஆட்சியில் எதுவும் நடக்கும்: கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா ஆட்சியில் எதுவும் நடக்கலாம் என்று சீரணி அரங்கம் இடிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதிகருத்துத் தெவித்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் பல ஆண்டுகளாக மக்களின் மனதில் இடம் பிடித்திருந்த சீரணி அரங்கம் நேற்றுஇரவு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, நியாயத்திற்கு இடமில்லை, அநியாயத்திற்குத்தான்இடம். நீதிக்கு இடமில்லை, அநீதிக்குத்தான் மதிப்பு என்ற ரீதியில் இந்த ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில்எதுவும் நடக்கலாம்.
இந்த ஆட்சியில் இடிப்பது, அடிப்பது ஆகியவை குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை. இதெல்லாம் இவர்களதுஆட்சியில் சர்வ சாதாரணம்.
காவிப் பிரச்சினையில் தமிழகம், ஆந்திரம் இணைந்து செயல்படலாம் என்று கூறும் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, முதலில் கிருஷ்ணா நீரை சென்னைக்குத் தரட்டும், அதன் பிறகு இணைந்து செயல்படுவது குறித்துயோசிக்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்துவது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம்.இருப்பினும், அனைத்துக் கட்சிகளும் இதை ஆதரித்தால் திமுகவும் அதை ஆதரிக்கும் என்றார் கருணாநிதி.
செம்மொழி: தயக்கம் ஏன்?
செம்மொழியாக அறிவிக்கத் தேவையான அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கு உள்ளதாக கூறப்பட்டும், இன்னமும்அதை அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, தமிழை செம்மொழியாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டுவருவதாக கூறியுள்ளார்.
கடந்த 1918ம் ஆண்டிலேயே தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1919 மற்றும் 1920ம் ஆண்டுகளிலும் இதேபோன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்கத் தேவையான 11 தகுதிகளும் தமிழுக்கு உண்டு என்று முன்பேஆராய்ந்து முடிவெடுக்கப்பட்டு விட்டது. தொன்மை, தனித்தன்மை, பல மொழிகளுக்குத் தாய் மொழி என்ற அந்த11 அம்சங்களும் தமிழுக்கு உண்டு .
இந் நிலையில் இன்னும் பரிசீலனை செய்கிறோம் என்று கூறுவது ஏன் என்று புரியவில்லை.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுகிறது என்று பிரதமர் வாஜ்பாய் கூறும் இனிப்பான செய்தியைக் கேட்கதமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி டெல்லியில் தமிழறிஞர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில்,திமுக எம்.பிக்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.


