For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈர நிலம் படப்பெட்டி கடத்தல்: திருட்டு விசிடி கும்பல் கைது

By Staff
Google Oneindia Tamil News

தேனி:

பாரதிராஜா இயக்கி வெளிவந்துள்ள ஈர நிலம் படத்தின் படச் சுருள் அடங்கி. பெட்டியைக் கடத்திச் சென்று திருட்டுவிசிடி தயாரிக்க முயன்ற தியேட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பலை தேனி போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Eera nilam movies film rolls

கைப்பற்றப்பட்ட ஈரநிலம் படச் சுருள்கள்
தேனியில் உள்ளது கிருஷ்ணா தியேட்டர். இங்கு பாரதிராஜா இயக்கியுள்ள ஈர நிலம் படம் திரையிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவுக் காட்சி முடிந்ததும் தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

தியேட்டர் வளாகத்தில் வாட்ச்மேன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இருந்தனர்.

சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் 2 மணியளவில் தியேட்டர் ஆபரேட்டர் கோபி, வாட்ச்மேன் பாலு ஆகியோர்படப் பெட்டியில் இருந்த பிலிம் சுருளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஜெகநாதபுரத்தில் உள்ளவீட்டுக்குச் சென்று கொடுத்து விட்டுத் தியேட்டருக்குத் திரும்பி விட்டனர்.

அங்கு ஏற்கனவே தயாராக இருந்த 7 பேர் ஈர நிலம் படத்தை திருட்டுத்தனமாக விசிடியில் பதிவு செய்யத்தொடங்கினர்.

பின்னர் அருகில் உள்ள ஒருமதுக் கடைக்கு மது அருந்தச் சென்றனர். அப்போது குடிபோதையில் திருட்டு விசிடிஎடுப்பது குறித்து கோபி உளறியுள்ளார். அங்கிருந்த ஒருவர் இதைக் கேட்டு விட்டு தியேட்டர் உரிமையாளர்கண்ணனுக்குத் தெரிவித்தார்.

அவர் உடனடியாக போலீஸுக்குப் புகார் கொடுத்தார். தியேட்டர் உரிமையாளர் கண்ணன், போலீஸ் படைஜெகநாதபுரத்தில் உள்ள குறிப்பிட்ட வீட்டுக்கு விரைந்தது.

அங்கு திருட்டுத்தனமாக விசிடி தயாத்துக் கொண்டிருந்த கோபால், செல்லப்பாண்டியன், ஜெயமணி, முருகேசன்,சுதாகர், கதிர்வேல், பழனி, ஜீவநிாதன், கோபி, பாலு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.படச் சுருள் மீட்கப்பட்டது.

இவர்களில் ஜீவநாதனும், சுதாகரும்தான் திருட்டுத்தனமாக தயாரிக்கும் விசிடிகளை மற்ற பகுதிகளுக்குக் கொண்டுசெல்லும் பணியை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X